1 வயது மகளுடன் கிணற்றில் தற்கொலைக்கு முயன்ற தாய் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்…
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை கிராமம், எம்ஜிஆர் நகரில் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த பிரியா வயது 29 என்பவர் தனது மகள் கௌசிகாவுடன்(வயது 1) குதித்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் கிணற்றில் குதித்த போது பிரியா கிணற்றில் இருந்த மின் மோட்டார் குழாயை பிடித்து கொண்டு மூழ்கவில்லை. ஆனால் சிறுமி கௌசிகா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். அப்போது பிரியா கூச்சளிட்டதை கண்ட அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆண்டிமடம் தீயணைப்பு வீரர்கள் நிலைய பொறுப்பு அதிகாரி முருகன் தலைமையிலான வீரர்கள் அழகானந்தம், பிரபாகரன், துரைசாமி, ராஜாங்கம், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் இரங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரியாவை மீட்டனர். அதன் பின்னர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
