காணாமல் போன தனது மகளை மீட்டு தரக்கோரி தாய் கண்ணீர் மல்க கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே அரசப்ப கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா (34). இவருக்கு 17 வயதில் மகள் உள்ளாா். இந்த மாணவி நொய்யல் அருகே புங்கோடை குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியிருந்து, புன்னம் சத்திரம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் கல்லூரிக்குச் செல்லாமல், குளத்துப்பாளையம் சித்தப்பா வீட்டில் இருந்த மாணவி, கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அக்கம் பக்கத்திலும், பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பாா்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் கௌசல்யா வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், கடவூா் அருகே அரசப்ப கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் லோகேஸ்வரன் (டிராக்டா் டிரைவா்) என்பவா் தனது மகளிடம் அடிக்கடி தவறாகப் பேசி வந்ததாகவும், அவா்தான் தனது மகளை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா். இதன்பேரில் காவல் ஆய்வாளர் நந்தகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி முதல் மாயமான தனது மகள் குறித்து 8 நாட்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை என கௌசல்யா வீடியோ வாயிலாக வேதனை தெரிவித்துள்ளாா்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தும் தனிப்படை அமைப்பதாக மட்டும் கூறியதாகவும், சந்தேகப்படும் நபா்களின் வீட்டுக்குச் சென்று கூட விசாரிக்கவில்லை என்றும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.
மேலும், மாயமான மாணவிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் மகளைக் காணாமல் பெற்றோா் கண்ணீா் மல்க காத்திருக்கின்றனா். மாணவியை விரைந்து மீட்டுத் தர வேண்டும் என பெற்றோா் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
