திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). தொழிலாளியான இவருக்கும், மனைவி செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த செல்வி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மாமனார் வீட்டுக்குச் சென்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு நிலைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்
