தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டுச் சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.4,730-க்கு விற்கப்பட்ட சென்னை – மதுரை டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.16,700 வரை எகிறியுள்ளது. சில வழித்தடங்களில் கட்டணம் 700% வரை உயர்ந்துள்ளது. இந்த அதிரடிக் கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை-சென்னையில் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
