Skip to content
Home » பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிக சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கினங்க திருமாவளவனின் படைவீரர்கள் ஜயநாயகம் காக்க கூடியுள்ளீர்கள். திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராய் மாணவர் திமுகவில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். தலைவருக்கு மட்டுமல்ல. எனக்கும் தோளோடு தோளாக நிற்பவர் திருமாவளவன். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவல்ல.. அரசியல் உறவல்ல.. கொள்கை உறவு. பட்டியலின மக்களின் நலனை பாதுகாக்கும் அரசு திராவிட மாடல் அரசு. அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளோம். சமூக நீதி, சமூக சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைக்கவே இந்த மாநாடு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு. ஜனநாயக ஆட்சியை அமைப்போம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்துவது போதாது. அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும்.” என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!