Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் ராஜினாமா

பாமக நிறுவனர்  ராமதாஸ்,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  புதுச்சோியில் நடந்த  பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞர்  சங்க தலைவராக  முகுந்தன் பரசுராமனை( ராமதாஸ பேரன்) நியமிப்பதாக ராமதாஸ. அறிவித்தார்.

இந்த நியமனத்துக்கு  அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனால் தந்தை, மகன் இடையே  உள்ள மோதல் வெளிப்படையாக தெரியவந்தது.  இந்த நிலையில்  கட்சியின் அடுத்த கட்டத்தலைவர்கள்   தந்தை, மகன் இடையே சமரசம் ஏற்படுத்த முயன்றனர்.

இதற்கிடையே  தந்தை, மகன் இடயே சமரசம் ஏற்படுத்த  முயற்சிகள் நடந்தது. இததில் வெற்றி கிடைக்காத நிலையில் இன்று ராமதாஸ் தைலாபுரம்   தோட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர்  அன்புமணி மீது சரமாரியாக குற்சாட்டுகளை தெரிவித்தார்.

இதற்கிடையே  பேரன்‘   முகுந்தன்,  பாமகவில் இருந்து  இன்று விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர்  தலைவர் அன்புமணிக்கு அனுப்பி வைத்தார்.  ராமதாஸ் தான் எங்கள் குலதெய்வம், அன்புமணி தான் எங்கள் எதிர்காலம் என்று அதில் கூறி உள்ளார்.  சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!