கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த தாயாரம்மாளின் கை, கால்களை கட்டி, சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு, ஒரு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் கீபேட் செல்போனை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனிதா அவரது கணவன் கொம்பையா இவரது நண்பர்கள் பார்த்திபன், சதீஷ்குமார், பாண்டீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து நகைக்காக திட்டமிட்டு மூதாட்டியை கை, கால்களை கட்டி நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில் குற்றவாளிகளை போலீசார் பிடிக்க சென்ற பொழுது தப்பிச்செல்ல என்ற பொழுது கொம்பையா மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நடுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
