Skip to content
Home » மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு பிரித்து வழங்கவில்லை,
திடீரென்று பழையாறு பஞ்சாயத்தை சேர்ந்த மறைச்செல்வன் தலைமையில் மீனவர்களுக்கு அரசால் வழங்கிய பட்டாவை இவர்கள் தங்கள் இஷ்ட்டம் போல் மனைப் பகுதியாகப் பிரித்து வீற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர், இதுகுறித்து செண்பகசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் இவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து நடவடிக்கை எடுத்துவருவகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செண்பகசாமிக்கு ஆதரவாக நாம்தமிழர் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி இதுதொடர்பாக மனுஅளித்திருந்தனர். இந்நிலையில் இன்று மக்கள்குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த செண்பகசாமி தன்னை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். எனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லை எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஊர்விலகலை நீக்கி எனது குடும்பத்தாரை கண்டுபிடித்துத்தர வேண்டுமென்று கூறி கூறைதீர் கூட்ட அரங்கு முன்பு செண்பகசாமி தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடன் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் மண்ணெண்ணெயை தட்டிவிட்டு அவரை மீட்டனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செண்பகசாமியிடம் மனுவை பெற்று காவல்துறையிரிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்காக செண்பகசாமியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!