நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தபோது ரூ. 40 ஆயிரம் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெல் என்ற ஜல்சன் ( 21) என்பது தெரிய
வந்தது. இதையடுத்து ஜெல்சனை கைது செய்த போலீசார், மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளை நாகை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை பார்வையிட்டார். தொடர்ந்து திறமையாக செயல்பட்ட போலீசாருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.