Skip to content
Home » கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த பிரச்சினை காரணமாக வெள்ளப்பள்ளம் கிராம பஞ்சாயத்தார் இவரது குடும்பத்தினரை கிராம கட்டுப்பாடு என கூறி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர் காமராஜ், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதனுடைய இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெள்ளபள்ளத்தை சேர்ந்த காமராஜ், கையோடு கொண்டு வந்த போர்வையை தரையில் விரித்து அதில் படுத்துக் கொண்டார். பின்னர் ஊரை விட்டு தன்னை ஒதுக்கி வைத்த வெள்ளப்பள்ளம் கிராம நிர்வாகத்தினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என படுத்து கொண்டு அலப்பறை கொடுத்தார்.

அப்போது ஆட்சியர் வரும் நேரம் என்பதால் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்த போலீசார் போர்வையில் படுத்து கிடந்த காமராஜை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு அந்த ஆசாமியோ போலீசாரிடம் பிடி கொடுக்காமல் முரண்டு பிடித்தார். ஒரு கட்டத்தில் தன்னை இங்கிருந்து கொண்டு செல்ல எத்தனித்தால், தான் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். இதனால்

அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த போலீசார், போர்வையில் படுத்து கிடந்த அந்நபரை அல்லேக்காக தூக்கி அங்கிருந்து கீழ்த்தளத்திற்கு கொண்டு வந்தனர். அப்போதுஅந்நபர் கூச்சலிடவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அந்நபரை நாகூர் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில் தனக்கு தீர்வு கிடைக்கவில்லை என கூறி மீனவர் ஒருவர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போத்திகிட்டு படுத்தால் என்ன? படுத்துகிட்டு போத்திக்கிட்டா என்ன? என்பது போல் போர்வையை விரித்து படுத்துறங்கி போலீசாரிடம் அலப்பறை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!