Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 26,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதையடுத்து இன்று இக்கோயிலின் முக்கிய திருவிழாவான அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நாகப்பட்டினம் பால்பண்ணைச்சேரி ஜெய பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து

புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மேளதாள வாத்தியங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். அப்போது பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடினர். பின்னர் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சாமந்தான்பேட்டை காமாட்சி அம்மன் சித்திரைத் திருவிழாவில் நாகை தாலுகாவை சேர்ந்த 7, மீனவ கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!