Skip to content
Home » நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

கடந்த 17.09.2023ம் தேதி காலை 06.30 மணி அளவில் நாகூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஓட்டுநர் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இறந்து போன ஆண் நபரின் உடல் தண்டவாளப்பாதையில் கிடப்பதாக நாகப்பட்டினம் இரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளித்தார் . அதன் பின்னர் நாகப்பட்டினம் நகர விஏஓ நாகப்பட்டினம் இருப்புப்பாதை நிலையத்திற்கு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் நாகை  இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜு இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் மேற்படி இறந்து போன நபர் நாகப்பட்டினம் காடம்பாடி திரௌபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்து(எ)கலியபெருமாள் (27) என்பதும் அவரது உறவினர்கள் இறந்து போன நபரின் உடலை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கல் பார்த்து அடையாளம் காட்டினர்.  பின்னர் உடலை பிரேத பரிசோதனை  நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  ஜீவிதன்,  பிரேத பரிசோதனை செய்தார்.

அப்போது அவர் இறந்துபோன நபரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருப்பதாகவும் அந்த காயமானது சுத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கும்போது மட்டுமே ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாகவே இவர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார். இறந்து போன முத்து(எ)கலியபெருமாளின் உடலை தண்டவாளத்திற்கு இடையே போட்டுள்ளனர் .  ஏதோ ஒரு இரயில் இறந்து போன நபரின் உடலில் மோதியதில் இறந்து போன நபரின் மற்ற காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்’ என  காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் தெரிவித்தார்.  அதன்

அடிப்படையில் மேற்படி தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா. உத்தரவின் பேரில் திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர்.த செந்தில்குமார்  வழிகாட்டுதலின்படி திருச்சி இருப்புப்பாதைக் காவல் உட்கோட்ட துணைக் காவல்கண்காணிப்பாளர்  இரா.பிரபாகரன்,  நேரடி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள்  சிவவடிவேல்,  சாந்தி ஆகியோர் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் மேற்படி இறந்துபோன நபர் மற்றும் சந்தேக நபர்களின் அலைபேசி எண்களை வைத்து புலன்விசாரனை செய்தனர். அதில்  1.சூரியகிருபா( 21) காடம்பாடி, நாகப்பட்டினம், 2 கார்த்தி, (19), மாரியம்மன்கோயில் தெரு, காடம்பாடி, நாகப்பட்டினம் ஆகியோரை  27.09.2023ந் தேதி கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில்  முத்து (எ) கலியபெருமாளை கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்து தண்டவாளத்தில் போட்டதாகவும் இரயிலில் அடிபட்டு இறந்ததுபோல் தெரியவேண்டும் என்று அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ரவுடியான  சூரிய கிருபா என்பவர் இறந்து போன முத்து (எ) கலியபெருமாளின் மைத்துனர் ஆவார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் முத்து (எ) கலியபெருமாள் அவரது மனைவி ஹேமாஸ்ரீ, (25), என்பவரை திருமணம் செய்ததில் இருந்து தினமும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியதுடன் அவரின் தாயாருடனும் தகாத உறவில் இருந்துவந்துள்ளதை தெரிந்து கொண்ட ஹேமாஸ்ரீயின் உடன்பிறந்த சகோதரரான சூரிய கிருபா மற்றும் அவருடைய உறவினர் கார்த்தியுடன் சேர்ந்து தனது தாயாரான குமுதவள்ளி என்பவருடன் தகாத உறவில் இருந்ததாலும் தனது சகோதரியை துன்புறுத்தியதாலும் மது அருந்த இரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று மது போதையில் இருந்தவரை கழுத்தை வெட்டி கொன்று தண்டவாளத்திற்கு இடையே போட்டு கொலையை மறைக்க இரயிலில் அடிபட்டது. போல ஜோடித்ததை ஒப்புக்கொண்டனர் சூரிய கிருபா. கார்த்தி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் சம்பவத்தின்போது பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தையும் கத்தியையும் கைப்பற்றி தனிப்படையினர்  கொலையாளிகளை நாகப்பட்டினம் கோர்ட்டில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இரயிலில் அடிப்பட்டு இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கானது புலன்விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட வழக்காக கண்டறியப்பட்டு உடனடியாக கொலையாளிகளை கைது செய்ததற்காக இருப்புப்பாதை காவல் உயர் அதிகாரிகள் தனிப்படையினரை வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!