Skip to content
Home » நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

  • by Senthil

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதைப்போல் நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்‌. இதற்கான நிகழ்வு இன்று நாகையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், தமிழக வெற்றி கழக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி சுகன்யாமுகுந்தன் முன்னிலையில், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக்

கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற மாவட்ட செயலாளர் சுகுமாறன் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி சுகன்யா முகுந்தன் ஆகியோர், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

நாகை மாவட்டத்தில் முதலில் மீனவர்களை குறி வைத்து அம்மக்களை தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைத்து வரும் அதன் நிர்வாகிகள், அடுத்து டெல்டா விவசாயிகளை பெருமளவில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தேர்தல் முடிவுகளுக்கு பின் பிற கட்சியில் இருந்து விலகி வரும் ஆயிரக்கணக்கானோரை நாகையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் புஸ்ஸிஆனந்த் முன்னிலையில் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைக்கும் முயற்சிகள் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!