Skip to content
Home » நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக 2 முறை( 8 ஆண்டுகள்) பணியாற்றியவர் நரேஷ்குப்தா(73) நேற்று மாலை காலமானார்.  இவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்  1973ம் ஆண்டு ஐஏஎஸ்   தேர்ச்சி பெற்ற  நரேஷ் குப்தா,  தமிழ்நாடு பேச் அதிகாரியாக  நியமிக்கப்பட்டார். இங்கு சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார். பின்னர் கவர்னரின் செயலாளர், உள்துறை செயலாளர் திட்டத்துகுழு உறுப்பினர்,  என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். பின்னர்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆனார்.  இவரது பதவி காலத்தில் சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலை நடத்தினார்.

2010 ம் ஆண்டு ஓய்வுபெற்ற குப்தா, பின்னர்  மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  ஓய்வுக்கு பிறகும் அவர்  சென்னை  அண்ணாநகர் மேற்கு அதிகாரிகள் குடியிருப்பில்  வசித்து வந்தார்.  உடல் நலக்குறவைு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று  மாலை 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.  நாளை அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

நரேஷ் குப்தா மறைவுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கவர்னர் ரவி  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!