Skip to content
Home » ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

முன்னாள் முதல்வர்  கலைஞர்  கருணாநிதி  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு தாலி, வேட்டி, சேலை,  வீட்டு உபயோகபொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில்  ஆ. ராசா வழங்கினார்.. பெரம்பலூரில் உள்ள பிரபலமான திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடந்தது. அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

25 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து ஆ. ராசா எம்.பி.  மணமக்களை வாழ்த்தி, பேசியதாவது:

திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக திட்டங்கள் கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

“ஜெய்பீம் ‘ சினிமா பார்த்துவிட்டு அந்த படத்தில் வரும் காட்சிகளில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று குறைகளை தீர்த்து வைக்கிறார்.
வேலைவாய்ப்பு,பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்‌.

நரிக்குறவர்கள் மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.  உங்களபை்போன்ற மக்களுக்கும் இன்னும் அதிகமான  திட்டங்களை தர இருக்கிறது திமுக அரசு. வரும் காலங்களில் நரிக்குறவ மக்கள் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன்,
மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் .ப.பரமேஷ்குமார்,
மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.எஸ்.பெரியசாமி,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு‌.அட்சயகோபால்,
வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன்,
ந.ஜெகதீஷ்வரன், எஸ்‌.அண்ணாதுரை,
பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜ்குமார்,

நரிக்குறவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்
மலையப்ப நகர் ஆர்.சிவக்குமார், எறையூர் பகுதி நரிக்குறவர்கள் நம்பியார், பாபு
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பழங்குடியினர்  இன மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!