Skip to content
Home » நயன்தாராவின்…… மண்ணாங்கட்டி…..

நயன்தாராவின்…… மண்ணாங்கட்டி…..

  • by Senthil

லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும்  நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு   தமிழ் படங்களில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில்  சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படம் ஜவானில் ஷாருக்கான ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவர்  புதிய தமிழ்ப்படம் ஒன்றில்  நடிக்க உள்ளார்  அந்த படத்திற்கு மண்ணாங்கட்டி(சின்ஸ் 1960) என பெயரிடப்பட்டுள்ளது.இதனை நேற்று பட நிறுவனம் அறிவித்தது.

‘பிளாக் ஷிப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கிஇப்படத்தை  இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை  தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை வீடியோவுடன் படக்குழு நேற்று  வெளியிட்டது.

வீடியோவை பொறுத்தவரை காட்டில் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை காட்சிப்படுத்தபடுகிறது. கல்வெட்டு ஒன்றும் காட்டபடுகிறது. பின்பு, பழைய கால செல்லாத சில்லறை நாணயங்கள், ராக்கெட் வடிவத்திலான  ரூபாய் தாள்,  உள்ளிட்ட பல கரன்சிகள் என பரவிக்கிடக்கும் மண்ணில் படத்தின் பெயர் போடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!