உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) திட்டத்தின் கீழ் கலைஞர் திட்ட கிராமம் கபிஸ்தலம் அடுத்த உம்பளாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு செயல் விளக்கத் திடல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ஈஸ்வர் ஆய்வு செய்தார். இக்கட்டான சூழ்நிலைகளை தாங்கி வளரும் ரகங்களுக்கான செயல்விளக்கங்களின் கீழ் 12 பொது மற்றும் 3 பட்டியல் இன விவசாயிகளுக்கு நெல் விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளனவா என விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் டிசம்பர் 10 ம் தேதிக்குள் தங்கள் சரியான போன் எண்ணை ஆதாருடன் இணைத்து இ கேஒய்சி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாபநாசம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுப் பொருட்கள் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, அலுவலர்கள் பிரிதிவிராஜன், எபிநேசன், பரணிகா, சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:நெல் விதை