Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள வௌ்ளம்… நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாடு-புதுச்சேரி சுற்றுலா பயணிகள்

நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக கவலைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கும்பகோணத்தைச் சேர்ந்த Super Yatra Agency ஏற்பாடு செய்த சுற்றுலாப் பயணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். திருச்சி, சென்னை,

சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 23.08.2026 அன்று மூன்று வேன்களில் அவர்கள் நேபாள சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வாகனங்களும் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்னும் சிலரின் நிலை குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்ற கவலை தொடர்கிறது.

திருச்சியைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது பாதுகாப்பாக காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள்:

  1. திருமதி. கற்பகம் ராஜமோகன் – 62 வயது
  2. திருமதி. சிவரஞ்சனி முத்துநாதன் – 46 வயது
  3. திருமதி. வள்ளிநாயகி சிவகுமார் – 61 வயது

இவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, மீட்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் விரைவில் இணைக்கப்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான அக்கறையாகும்.

error: Content is protected !!