தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் மற்றும் ஹாய் போங் நகரங்களுக்கு புதிய சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் அரிசி, தானியங்கள், உரம், பருத்தி, நூல் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் மலேசியா நாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட உள்ள இந்த கப்பல் போக்குவரத்து, உள்ளூர் தொழிற்சாலைகளின் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து வியட்நாமுக்கு புதிய சரக்கு கப்பல் சேவை
