தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் CBI-யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிப்பதற்காக 94444 42519 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும், hobacchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லஞ்ச புகார்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் CBI அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க புதிய எண்கள்!
