திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்குத் திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில், புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் அவர் மீது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
