கர்நாடகாவின் பெங்களூரு தீபாஞ்சலி நகரில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மென்பொருள் பொறியாளர் சிந்துஸ்ரீ (29) மற்றும் அவரது உறவினர் வித்யா (19) லாரி மோதி உயிரிழந்தனர். ஹல்தி சடங்கிற்கு பதிலாக இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக சிந்துஸ்ரீயின் தந்தை நஞ்சுண்டப்பா கண்ணீர் மல்கக் கூறினார். விபத்துக்குப் பிறகு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புதுமணப்பெண் விபத்தில் பலி!
