Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும்,  திருவள்ளூர்,  சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் , தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை,  கடலூர் , விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி , அரியலூர் , பெரம்பலூர்,  திருச்சி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை,  கன்னியாகுமரி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!