Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

6 மாதமாகக் குடிநீர் விநியோகம் இல்லை: ஒரு குடம் ரூ.15-க்கு வாங்கும் அவலம்;

6 மாதமாகக் குடிநீர் விநியோகம் இல்லை: ஒரு குடம் ரூ.15-க்கு வாங்கும் அவலம்;

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பட்டணமருதூர் ஊராட்சிக்குட்பட்ட பாலார்பட்டி கிராமத்திற்கு சுமார் 6 மாத காலமாகக் குடிநீர் முறையாக வராததால், ஒரு குடம் தண்ணீரை ரூ.15 கொடுத்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் “எங்கள் கிராமத்திற்குச் சுமார் 6 மாத காலமாகக் குடிநீர் சுத்தமாக வரவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை பஞ்சாயத்துச் செயலாளரிடமும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் எங்கள் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

தற்போது ஒரு குடம் தண்ணீரை ரூ.15 கொடுத்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் தயவுகூர்ந்து எங்கள் கிராமத்திற்கு உடனடியாக நிரந்தரக் குடிநீர் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link