ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்தநிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து மிதாலி ராஜ் கூறியது:
லோயர் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் இல்லை. அந்த இடத்தில் பலரை நாம் முயற்சித்து பார்த்திருக்க வேண்டும். அதையும் செய்ய தவறினோம். ஆடவர் அணியில் அதை செய்து பலன் அடைந்துள்ளனர். தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால் இளம் வீராங்கனை எனது சாய்ஸ். ஸ்மிருதி, ஜெமிமா போன்றவர்கள் அணியில் உள்ளனர். ஸ்மிருதி, நீண்ட காலமாக துணை கேப்டனாக உள்ளது கவனிக்கத்தக்கது” என்றார்.
