Skip to content
Home » தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

  • by Senthil

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ம் தேதியன்று 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்தியப் பிரதமராக மோடி இருந்தார். 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில், மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி  வெற்றிகளைப் பெற்றது. பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ மூலம் கோரப்பட்டிருந்த கேள்வியில்,  “ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஒருவர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததேயில்லை என அமித்ஷா பொதுகூட்டத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!