Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு  பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்.   இந்த சந்திப்பு குறித்து இன்று காலை டில்லியில் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர், மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்தோம்.   முந்தைய மக்களவை தேர்தல் முதல்  தற்போது வரை அதிமுக, பாஜக கூட்டணி   தொடர்கிறது. அண்ணாமலையுடன் அதிமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.  ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை உள்ளது.   கொள்கை அடிப்படையில் அந்தந்த  கட்சிகள் செயல்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர்  தேர்வு மற்றும்  பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!