Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் விஜய் உட்பட 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 276 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிகபட்சமாக 39 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு பரிசீலனை 11 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக அலுவலகம் நுழைவாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வேட்பு மனு பரிசீலனைக்கு வருகை புரிந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர்.
வேட்பு மனு பரிசீலனை தொடங்கும் சிறிது நேரத்துக்கு முன்பு திடீரென்று மின்தடை ஏற்பட்டது இதனால் அந்த வளாகமே சிறிது நேரம் இருளில் மூழ்கியிருந்தது பிறகு மின்சாரம் வந்தது.
வேட்பு மனு பரிசீலனை தொடங்கும் சிறிது நேரத்துக்கு முன்பு திடீரென்று மின்தடை ஏற்பட்டது இதனால் அந்த வளாகமே சிறிது நேரம் இருளில் மூழ்கியிருந்தது பிறகு மின்சாரம் வந்தது.
இதையடுத்து
திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகராட்சி மண்டல் 2 அலுவலகத்தில்
கிழக்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் மது ஸ்மிதா சாஹீ ,
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியன் தலைமையில் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.
வேட்பு மனு பரிசீலனை
செய்யும் அறைக்குள்
வேட்பாளருடன் மூன்று பேர் மட்டும் மனு பரிசினை செய்யும் அறையில் அனுமதிக்கப்பட்டனர்.வேட்பாளர்கள் அனைவரும் உள்ளே சென்ற பிறகு அறை சாத்தப்பட்டு பரிசீலனை செய்யும் பணி தொடங்கியது.
அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வேட்பு மனு பரிசீலனை செய்யும் அறைக்குள் வேட்பாளர்கள் அலுவலர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் சில வேட்பாளர்கள் தாமதமாக வேட்பு மனு பரிசினை செய்யும் அறைக்கு வந்தனர்.
பிறகு வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது அதிகாரிகள் வேட்பாளர்களை பெயரை வாசிக்க அதனை வேட்பாளர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கேட்டனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்,திமுக வேட்பாளர்
இனிகோ ஆரோக்கியராஜ்,
அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், உள்ளிட்ட20 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.சுயேச்சைகள் சூர்யா,அபிராமி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோன்று மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு, அமமுக வேட்பாளர்
ராஜசேகரன் உள்பட 24 வேட்பாளர்களின் 22பேர் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கோ. சண்முகம் மற்றும் திமுக மாற்று வேட்பாளர் அன்பழகன் ஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது,திருவரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன்,திமுக வேட்பாளர் துரைராஜ்,திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
அதிமுக வேட்பாளர்
குமார்,லால்குடியில் திமுக வேட்பாளர் பாரி வள்ளல்,அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்,மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன், அதிமுக வேட்பாளர் பரதன்,துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர்விச்சு லெனின் பிரசாத், அதிமுக வேட்பாளர் சரோஜா,முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணை ராஜா அதிமுக வேட்பாளர் யோகநாதன்,மணப்பாறையில் வேட்பாளர்திமுக கூட்டணி கட்சி அப்துல் சமது, அதிமுக வேட்பாளர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வருகிற ஒன்பதாம் தேதி வரை முயற்சி பெறப்படுகிறது பிறகு வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுகிறது ஒரு தொகுதியில் 14 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!