வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மூளைக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு, அவர் பொதுவெளியில் நேரடியாக தோன்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது மனைவி ரி சோல் ஜூ மற்றும் மகள் கிம் ஜூ ஏ ஆகியோருடன் தேசிய ஆடை மற்றும் காலணி கண்காட்சியை பார்வையிட்ட புகைப்படங்களை வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்புகைப்படங்கள் மூலம், அவர் குறித்த மரண யூகங்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பது உறுதியாகியுள்ளது.
மரண செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வட கொரிய அதிபர்
