Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்னி பேருந்து கட்டணம் மளமளவென உயர்வு

தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள மக்களுக்குத் தனியார் ஆம்னி பேருந்துகள் பெரும் ‘கட்டண அதிர்ச்சி’யைக் கொடுத்துள்ளன.சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.3,000, மதுரைக்கு ரூ.3,500, தூத்துக்குடிக்கு ரூ.3,200, திருச்சிக்கு ரூ.2,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முக்கிய காலங்களில் இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்​களில் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் வாக்​களிக்க தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வார்​கள். அவர்​களின் வசதிக்​காக நாளை முதல் தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பில் 10 ஆயிரம் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் அரசு பேருந்​துகளில் முன்​ப​திவு செய்ய முடி​யாதவர்​கள் அடுத்​த​படி​யாக தனி​யார் ஆம்னி பேருந்​துகளை தேர்வு செய்​வார்​கள், இந்​நிலை​யில் பயணி​களின் சூழ்​நிலையை பயன்​படுத்தி சில ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கின்​றனர். சென்​னை​யில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்​சி, நெல்லை மற்​றும் நாகர்​கோ​வில் போன்ற முக்​கிய நகரங்​களுக்கு செல்​லும் ஆம்னி பஸ் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட 2 முதல் 3 மடங்கு வரை அதி​கரித்​துள்​ளது. சாதாரண நாட்​களில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் நிலை​யில் தற்​போது பல மடங்கு அதி​கரித்து உள்​ளது. இதனால் நடுத்தர மக்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகி​உள்​ளனர்.

நாளை, நாளை மறு​நாள் இரண்டு நாட்​களும் சென்​னை​யில் இருந்து நெல்​லைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதனமில்லா பேருந்​துகளில் அதி​கபட்ச கட்​ட​ணம் ரூ.2,400 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தற்​போது ரூ.3 ஆயிரம் வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

தூத்​துக்​குடிக்கு படுக்​கைவசதி கொண்ட குளிர்​சாதன பேருந்​துகளில் அதி​கபட்​ச​மாக ரூ.2,700 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.3,200 வரை​யும், மதுரைக்கு அதி​கபட்​ச​மாக ரூ.2,200 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.2,400 முதல் 3,500 வரை​யும், திருச்​சிக்கு அதி​கபட்​ச​மாக ரூ.1,500 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.2,000 முதல் 2,600 வரை​யும் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

பொது​மக்​கள் தீபாவளி, பொங்​கல் போன்ற பண்​டிகை நாட்​களில் இது​போல அதிக கட்​ட​ணம் வசூலிப்​ப​தைக் கூட ஒரு வியா​பார யுக்​தி​யாக கடந்து செல்ல முடிகிறது. ஆனால் தேர்​தல் என்​பது ஜனநாயக கடமை அதை நிறைவேற்ற செல்​வோரிடம் இவ்​வாறு அதிக கட்​ட​ணம் வசூலிப்​பதை என்ன என்று சொல்​வது என ஆதங்​கத்தை வெளிப்​படுத்​துகின்​றனர்​.

error: Content is protected !!