Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்ற போது அங்கு வந்த காட்டு யானை  தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின் வனப் பணியாளர்களால் ரங்கசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவரை காட்டு யானை தாக்கியது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!