Skip to content
Home » ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்று முதல் இ-பாஸ் பதிவு துவக்கம்..

ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்று முதல் இ-பாஸ் பதிவு துவக்கம்..

வானங்களின் நெரிசலை தவிர்க்க ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுதளங்களுக்கு இபாஸ் முறையை அமல்படுத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. இது தொடர்பாக மாவட்டக்கலெக்டர் அருணா வெளியிட்ட செய்திகுறிப்பில்  epass.tnega.org என்கிற இணையதள முகவரியில் இன்று காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோல் கொடைக்கானலுக்கு “epass.tnega.org” என்கிற இணைய முகவரியை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர். இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!