Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் தவெக எம்எல்ஏவிற்கு நாற்காலி போடுவதில் எதிர்ப்பு

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அமைப்பாளராக தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டுள்ளது. இதற்கு மேயர் பொறுப்பு துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் எம்எல்ஏவிற்கு நாற்காலி போடப்பட்டதால் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக துணை மேயர் அறிவிப்பு.

இதனையடுத்து ஆணையர் யார் யாருக்கு எங்கு நாற்காலி போட வேண்டும் என அரசு ஆணையை படித்து காட்டுகிறார்.

அதனை தொடர்ந்து மேலே போடப்பட்ட நாற்காலி கீழே இறக்கப்பட்டது. பார்வையாளர்கள் இடத்தில் நாற்காலி போட வேண்டும், அரங்கு மேடையில் போட கூடாது என எதிர்ப்பு.கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கே இருக்கை அமைப்பது என்பதில் குளறுபடி.

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் மாமன்ற கூட்டம் தஞ்சை மாநகராட்சியில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தஞ்சை மாநகராட்சி மேயர் பதவியை சன் ராமநாதன் ராஜினாமா செய்த நிலையில் துணை மேயராக இருக்கும் அஞ்சுகம் பூபதி பொறுப்பு மேயராக பதவி அவர் பதவியேற்று அவர் தலைமையில் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி

கழக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு இருக்கை எங்கே அமைப்பது என்பதில் அமைப்பது என குளறுபடி மேயர் இருக்கைக்கு எதிர் புறம் இருந்த இருக்கையினை மேயர் இருக்கைக்கு அருகே அமைக்க வேண்டும் என கோரி மேடைக்கு எடுத்துச் சென்று அருகே அமைத்த நிலையில் மீண்டும் மேயர், ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி அதனை கீழே மாவட்ட உறுப்பினர்கள் அமரும் இடத்திற்கு அருகே முடிவு செய்து கீழே இறக்கை அமைத்தனர். முன்னாள் மேயர் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து குறித்து அதிமுக கவுன்சிலர் காந்திமதி தெரிவித்த கருத்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!