Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில் திடீரென இன்று  நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், பொய்கைநல்லூர், செருதூர்,திருப்பூண்டி, காரைநகர், மேலப்பிடாகை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.  இதுபோல தஞ்சை  மாவட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.   இதுபோல  மயிலாடுதுறை நகரிலும்  இன்று மதியம் முதல் மழை பெய்து வருகிறது. மேலும் சம்பா தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!