Skip to content
Home » ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வாங்கியது. இந்த விருதின் மூலம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தனர் பொம்மன் மற்றும் பெல்லிதம்பதி. இவர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராட்டினார். பின்பு பிரதமர் மோடி கடந்த மாதம் தமிழ்நாடு வந்த நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள  யானைகள் முகாமுக்கு வருகை தந்து பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியை பாராட்டினார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி பொம்மன் – பெல்லி தம்பதியை சந்தித்து அவர்கள் பெயர் பொறித்த சிஎஸ்கே ஜெர்சியை வழங்கி பாராட்டினார். உடன் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் இருந்தார். அப்போது சிஎஸ்கே ஜெர்சியை  அவர்களுக்கு பரிசாக வழங்கினார். அவர்களுக்கு கொடுத்த ஜெர்சியில் அவர்களின் பெயரும் 7ம் நம்பரும் பொறிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!