Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் பணியாளர்கள் போராட்டம்!

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (AATMA) திட்ட பணியாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300 கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமித்ரா AATMA திட்ட பணியாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் செய்தியாளர் சந்திப்பு

வேளாண்மை துறை சார்ந்த வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இரண்டு அணிகள் என 1215 நபர்கள் ஒரு வட்டாரத்துக்கு பணியாற்றி வருகிறோம் , நாங்கள் 2012 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டோம் எங்களுக்கு இதுவரையும் எந்தவிதமான ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை மத்திய அரசு சார்பில் வருடத்திற்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த ஊதிய உயர்வு எங்களுக்கு வந்தடையவில்லை , கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு அரசின் துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகிறோம் ஆனால் அரசு சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் நாங்களும் இந்த புதிய அரசை ஆதரித்தோம், எங்களுக்கு ஒரு முன்னேற்றத்தினை இந்த அரசு வழங்க வேண்டும்

கடந்த 15 ஆண்டுகளாக 15,000 ரூபாய் மட்டும் ஊதியமாகக் கொண்டு குடும்ப செலவுகளை பார்ப்பது மிகவும் கடினமான ஒரு சூழல் என்று அனைவருக்கும் தெரியும் , மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட 10% ஊதிய உயர்வு எங்கே சென்றது என்று தெரியவில்லை இதனை தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உயர்த்தப்பட்ட ஊதியம் எங்கே சென்றது என்று கண்டறிந்து நிலுவையில் உள்ள தொகையினை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஊதிய உயர்வுடன் கடந்த 15 ஆண்டுகள் எங்களுக்கு உரிய சலுகைகள் கிடைத்து இருந்தால் தற்பொழுது  B அணியை சார்ந்த நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஊதியம் வாழ்ந்திருக்க வேண்டும் A அணியை சார்ந்தவர்கள் 35 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இத்தனை ஆண்டுகளாக 15,000 மட்டுமே பெற்று வருகிறோம் மேலும் எங்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கையை ஏஜென்சி மூலமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் வேளாண்மை துறையுடன் ஒன்றிணைந்து விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்கி அவர்களே முன்னேற்றுவதற்கு பாடுபட்டு வருகிறோம்

எங்கள் துறை ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது மூன்று மாதம் குழந்தை ஈட்டியபின் ஊதியம் இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் 3 மாதங்களுக்கு பின குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலையும எங்களுக்கு ஏற்படுகிறது

வருவாய்த்துறை செய்ய வேண்டிய டிஜிட்டல் பயிர் கணக்காயர் பணியினை எங்களுக்கு நியமிக்கப்படுகிறது இந்த பணியை உயிரை பணயம் வைத்து தான் செய்து வருகிறோம். கிராமப்புற பகுதிகளில் உள் பகுதிகளில் பாம்புகள் நாய்கள் என பல்வேறு ஆபத்துகள் உள்ள பகுதிகளுக்கு பெண்கள் உட்பட அனைவரையும் பயிர் கணக்கிற்கு அனுப்பி வைக்கின்றனர் , இது போன்ற பணிகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் கூட எங்களுக்காக காப்பீடு அல்லது நிதி ஒதுக்கீடு என்று எதுவுமே கிடையாது இதற்கு தமிழக முதலமைச்சர் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்

எங்களுக்கு மருத்துவ விடுப்பு மற்றும் மற்ற சலுகைகள் வழங்கப்படுவதில்லை அதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எங்கள் மீது அரசு அதிகாரிகள் அதிகளவில் அழுத்தம் செய்கின்றனர் , எங்கள் பணி அல்லது டிஜிட்டல் பயிர் காப்பாயம் பணியினை மேற்கொள்ள முடியவில்லை என்றால் எங்களுக்கு ஊதியம் வழங்குவதை தடுத்து நிறுத்துகின்றனர் , மேலும் பணித்திறன் சான்றினை காரணம் காட்டி எங்களை மிரட்டுகின்றனர் மற்றும் மாநிலங்களில் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பணித்திறன் சான்று வழங்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் மட்டும் மாதத்திற்கு ஒருமுறை பணித்திறன் சான்றுகள் வழங்கப்படுகிறது மூன்று முறை பணித்திறன் சான்றுகளில் சி கிரேட் வழங்கப்பட்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் இதன் மூலம் எங்களை அதிகாரிகள் மீது எந்த விதமான கேள்விகளும் எழுப்பாத வகையில் சூழலை ஏற்படுத்தி உள்ளார்கள்

புதிதாக வந்த ஆட்சியாளர்களுக்கு தவறான கருத்துக்களை அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்லி எங்களை அதிகாரிகள் அதிகளவில் கஷ்டப்படுத்தி வருகிறார்கள் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.

error: Content is protected !!