ஜெயிலுக்கு வரல… திமுகவை போட்டுப்பார்க்கும் சிதம்பரம்

446
Spread the love

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் கசப்பான சம்பவங்களுக்கு காரணம் சிதம்பரம் தான் என்கின்றனர் இருகட்சிகளின் நிர்வாகிகள். சிதம்பரத்திற்கு எப்போதும் திமுகவில் மீது ஒரு கோபம் உண்டு. அது ஏன் என தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை பெரியதாக்கியது அவர் தான் அது பழைய கதை. சமீபத்தில் 100 நாட்களாக திகாரில் தான் அடைக்கப்பட்டிருந்த போது திமுகவினர் தன்னை வந்து பார்க்காதது  சிதம்பரத்திற்கு கடும் கோபம். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை கேட்டார் சிதம்பரம்.  ஆனால் திமுக ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அழகிரியை தட்டிவிட்டு அறிக்கை தர சொன்னார். அறிக்கை கொடுக்க முதலில் அழகிரி தயங்கியிருக்கிறார். நான் பார்த்துக்கொள்கிறேன் என பசி கொடுத்த தைரியத்தில் தான் அறிக்கை கொடுத்து மாட்டிகிட்டராம் அழகிரி..  தற்போது கூட துரைமுருகனின் கருத்துக்கு டிவிட்டரில் பதில் கூறியிருப்பது யார் என்று பாருங்கள். கார்த்திக் சிதம்பரம் தான். எனவே இந்த குழப்பத்திற்கு சிதம்பரம் தான் என்பது திமுக தலைமை நிர்வாகிகளுக்கும் தெரியும், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரியுமாம்.  அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிதம்பரத்திற்கு ஏன் இந்த வேண்டாத வேலை என் புலம்புகின்றனர் காங் நிர்வாகிகள்… 

LEAVE A REPLY