Skip to content
Home » டிவி சமையல் நிகழ்ச்சி… கடையில் இருந்து வந்த பிரியாணியால் கலகல

டிவி சமையல் நிகழ்ச்சி… கடையில் இருந்து வந்த பிரியாணியால் கலகல

பாகிஸ்தான்  டிவியில் சமையல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.  தி கிச்சன் மாஸ்டர் என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்  சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள பிரபல கடையிலிருந்து பிரியாணியைவாங்கி கொண்டு வந்து உள்ளார். ஆனால் அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.

இருந்தாலும் போட்டியாளர் வெளியேற மறுத்துவிட்டார். இது குறித்து போட்டியாளர் கூறும் போது நிகழ்ச்சியின் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு தட்டில் கொண்டுவரப்படும் உணவு நீங்கள் தயாரித்ததாக இருக்க வேண்டும் என்று என்னிடம்  யாரும் கூறவில்லை. இந்த பிரியாணி பார்சலை பெற வரிசையில் நின்று கடுமையாக உழைத்ததாகவும், அதை நடுவர்களுக்கு கொண்டு வருவதற்கு சிரமப்பட்டதாகவும் போட்டியாளர் கூறினார். போட்டியாளர் வெளியேற மறுத்து, நடுவர்களுடன் மோதலில் ஈடுபட்டார்,  இதனால் நடுவர்களில் ஒருவர் கோபத்தில் செட்டை விட்டு வெளியேறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!