கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 2000 ம் ஆண்டு முதல் பள்ளிக் கூடத்துடன் இணைந்து அங்கன் வாடி செயல் பட்டு வந்தது. அங்கன் வாடி கட்டடம் பழுது காரணமாக கடந்த 2016 ம் ஆண்டு அங்கன் வாடி வேறு இடத்திற்கு மாற்றப் பட்டது. அங்கன்வாடி கட்டடமும் பழுது காரணமாக இடிக்கப் பட்டது. பள்ளி வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் அங்கன் வாடி கட்டடத்தை கட்டி, மீண்டும் அங்கன்வாடியை செயல்பட வைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில் பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் எம்.எல் ஏ, அல்லது எம்.பி நிதியில் அங்கன்வாடி கட்டடத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். இதனால் பள்ளி அருகிலுள்ள குழந்தைகள் பயன் பெறும் என்றனர்.