Skip to content
Home » நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

  • by Senthil

 பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நான் வெற்றி பெற்றால் என்கிற அடிப்படையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்… .. 

1. உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல்… அரியலூர் -பெரம்பலூர்-துறையஸ்ரீர்-நாமக்கல் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

குளித்தலை நகராட்சிக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நிறுவனங்களின் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் மதிப்பிற்கு இலவச உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.

2. கல்வியை மேம்படுத்துதல்…

லால்குடி மற்றும் குளித்தலையில் தலா ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

துறையூரில் உள்ள பச்சமலையின் சைனிக் பள்ளி அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

SRM கல்வி அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகத்துடன் இணைந்து வேந்தரின் இலவச உயர்கல்வி திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ-மாணவியர் 1200 பேருக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.

3. மேம்படுத்தப்பட்ட மருத்துவம்..

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு SRM மருத்துமவனை மற்றும் மருத்துவ நிறுவனங்களின் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு 10 ல்சம் மதிப்பிற்கு இலவச உயர் சிகிச்சைகான மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.

4. வேலைவாய்ப்பு உறுதிபடுத்துதல்…

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களா உயர்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 6 மாதத்திற்க ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இளைஞர்களக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்திட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் (skill development centre) தொடங்கப்படும்.

மகளிர் சுயத்தொழில் தொடங்கிட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசின் ஆதரவுடன் பெரம்பலூர் பாராளும்னற தொகுதியில் குறைந்தபட்சம் ஒரு பொதுத்துறை நிறுவனமாவது நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

5). ரயில் சேவை மேம்படுத்துதல்..

குருவாயூர் மற்றம் மங்களூர் விரைவு ரயில்கள் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கட்பட்ட ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

6). இளைஞர் நலன் ஊக்கப்படுத்துதல்..

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கபட்ட 6 சட்டமன்றத் தொகுதியிலும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

7. விவசாயத் துறையை வலுப்படுத்துதல்.

6சட்டமன்றத் தொகுதியிலும் விவசாயிகள் நலனுக்காக உழவர் வழிகாட்டு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். (ஆராய்ச்சி , வி்றபனை ஊக்குவித்தல், மதிப்புக்கூட்டுபொருள் தயாரித்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும்). விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்று நீரை பாசனத்திற்காக சேமிக்க முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தப்படும்.

பெரம்பலூர் மற்றும் முசிறியில் சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பழங்களுக்கு மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளபடும்.

மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி மற்றும் பெரம்பலூர் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடுகள் பெறப்படும், நமது விவசாய விளைபொருட்களின் பாரம்பரியம் மற்றும் தரம் பாதுகாக்கப்படும்.

8). போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் … 

திருச்சியிலிருந்து சேலம் செல்வதற்கான மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் வழியாக செல்லும் தற்போதுள்ள சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருச்சி No.1 டோல்கேட்டிலிருந்து முசிறி செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபடும்.

9). சுற்றுலாவை மேம்படுத்துதல்..

இரஞ்சன்குடி கோட்டை, வாலிகண்டபுரம் கோவில் மற்றும் சாத்தனூர் கல்மரப் பூங்கா ஆகிய தொன்மையான இடங்களை சுற்றுலாத் தலங்களாக தரம் உயர்த்தப்படும்.

பச்சலை மற்றும் புளியஞ்சோலையில் சூழலிலயல் சுற்றுலா மேம்படுத்தப்படுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

10). நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை…. 

காவிரி ஆற்றின் உபரி நீர் சிக்கதம்பூர் ஏரியை நிரப்பவும், நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காவிரி ஆற்றிலிருந்து குளித்தலை தொகுதியில் உள்ள பஞசப்பட்டி ஏரிக்கு நீர் நிரப்ப தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

11). திருஉருவ சிலைகள் அமைத்தல்..

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகுட்பட்ட கூகூர் கிராமத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்க வெண்கல சிலை டாக்டர் பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும். வீரன் சுந்தரலிங்கம் குடும்பனாரின் நினைவைப் போற்றும் வகையில் துறையூர் ரவுண்டான பகுதியில் வெண்கலச் சிலை டாக்டர் பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும்.

12). போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்தல்..

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  6 சட்டமன்றத் தொகுதியிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!