Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின்  வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். 207 படிகள் கொண்ட இம்மலையின் மேல் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில்மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்
இந்நிலையில் நிகழாண்டு வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் முருகன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்  விராலிமலை முருகன் கோயில் மலைக்குள் உள்ள அடந்த வனப்பகுதியில் மயில்களுக்கு போதிய இரை கிடைக்காததால் விராலிமலை நகர் பகுதி குடியிருப்புகளை தேடி வந்து ஆண் மயில் உணவருந்தி செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!