Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை கூட்டம் கிளை தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைச் செயலாளர் கார்த்திகேயன், கிளை பொருளாளர் பரமசிவம் எம். . ஆர், ராஜேந்திரன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறக்கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின் விளக்க உரையாற்றினார். ஆட்டோ சங்கர் மாவட்ட நிர்வாகி தீனதயாளன், மாவட்ட பொருளாளர் இன்பராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நடைபெற்ற கூட்டத்தில்

பிப்ரவரி 16 நடைபெறக்கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதும் ஆட்டோ ஓட்டாமல் நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கவுல் பாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு அமைத்துள்ள சிஐடியு சங்க தகவல் பலகை கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ,வெளிமாவட்ட ஆட்டோ ஓட்டியதை தடுத்த சிஐடியூ ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து பொய் புகார் அளித்த முருகையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!