Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரத்தில் ஷேர் ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்வதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் வசிக்கும் ஷாஜகான் என்ற நபர் ராணிப்பேட்டையில் இருந்து தனது காரில் 30 கிலோவை எடுத்து வந்து அதை ஷேர் ஆட்டோவில் மாற்றி எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செட்டிகுளம் மலையடிவாரத்தைச் சேர்ந்த மதியழகன், நாகப்பா , பொம்மானப்பாடியைச் சேர்ந்த அசோக் என்பவர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!