Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய கிளை கூட்டம் கிளை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் குணசேகரன், கிளை பொருளாளர் ராமசாமி கிளை நிர்வாகிகள் வெள்ளையம்மா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 16ஆம் தேதி மறியல் போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின் விளக்க உரையாற்றினார் .சிஐடியு மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி உரையாற்றினார்கள். கூட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி நடைபெறக்கூடிய மறியல் போராட்டத்தில் கலந்து

கொள்வதும் என்றும் கடையடைப்பு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையால் அவ்வப்போது கடையை அப்புறப்படுத்தும் என்று அறிவிப்பை கைவிட வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பெரம்பலூர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், பெரம்பலூர் நகரில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!