Skip to content
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சில்லக்குடி கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் C. வேலுமணி வழிகாட்டுதலின்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர் செந்தமிழ்செல்வி ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டுவந்தனர்.

இதன்படி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவல்துறையினரை கண்டு தப்பி செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் 1.ராஜா(எ) மருதமுத்து த/பெ கண்ணன் சில்லக்குடி பெரம்பலூர் 2.அய்யாக்கண்ணு த/பெ கூத்தப்பர் சில்லக்குடி பெரம்பலூர். ஆகியோர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மேற்படி இருவரையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் மேற்படி எதிரிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 192 மது பாட்டில்கள் மற்றும் டைமன்ட் பிரான்டி 8 பாட்டில்கள் மற்றும் பீர் 12 பாட்டில்கள் என மொத்தம் 212 பாட்டில்களையும் அவர்கள் மது கடத்தலுக்கு பயன்படுத்திய TVS XL 100 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி எதிரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் C.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்படி எதிரிகள் இருவரையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் லதா நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!