Skip to content
Home » பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது….

பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன்(தலைமையிடம்) (பொறுப்பு) தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் அவரது குழுவினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுசாரயம், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 13.03.2024-ம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாயாண்டி (49) காலனி தெரு, கொத்தவாசல் கிராமம், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்ற நபர் தனது வீட்டிற்கு பின்புறமாக அரசால் தடைசெய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து 180மிலி அளவுள்ள 16 பாட்டில்களை பறிமுதல் செய்தனர் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!