பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார். 
காலியாக கிடந்த தண்ணீர் பாடடிலில் தான் கெரசின் கொண்டு வந்து உடலில் ஊற்றி தீவைத்து உள்ளனர். இந்த வாலிபரை எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என தெரிகிறது. பின்னர் அந்த வாலிபர் சடலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சடலமாக கிடந்த இளைஞர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக எரித்துக் கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. காதல் விவகாரமா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிபர் யாரும் காணாமல் போய் இருக்கிறார்களா என அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.
