தமிழ்நாடு முழுவதும்ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டும். தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள் பாலிப்பார்.
அந்த வகையில் அரியலூர் நகரின் மேலத்தெருவிலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்தில், ஆடி ஐந்தாவது வெள்ளியான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு, பட்டுப் புடவைகள் சார்பில் நிறைமாத கர்ப்பிணியாக பெரியநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, மேலும் ஒரு லட்சம் வளையல்களால் பெரியநாயகி அம்மனையும், அம்மன் வீற்றிருக்கும் பீடத்தையும் வண்ண வண்ண கண்ணாடி வளையல்களால், தோரணம் அமைந்திருந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது. திரளான பக்தர்களும், பொதுமக்களும் ஆலயத்திற்கு வருகை தந்து பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்து, வணங்கி சென்றனர்.
