சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான ஒரு மாதகால ஆளுமைத் தேர்வு பயிற்சியை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி 23-11-2026 முதல் 20-12-2026 வரை நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் 22.11.2026 மாலை 5 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மையத்தில் நேரில் பதிவு செய்யலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும்.
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுமைத் தேர்வு பயிற்சி
