Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எஸ்எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதல் விவகாரமா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(59). திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்(27) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கலைவேந்தன் கணேசன் வீட்டிற்கு சென்று ரகலையில் ஈடுபட்டுள்ளார். இதனை எஸ்எஸ்ஐ கணேசன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியதில் கணேசன் காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!